வள்ளன்மையில் சிறந்த அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி!!!

வள்ளன்மையில் சிறந்த அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி!!!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட், 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது இரண்டு மாளிகைகளை  தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார். 

செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த கோடீஸ்வரர்களில்  ஸ்காட்டும் ஒருவராவார். 

கலிஃபோர்னியா சமூக அறக்கட்டளை ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.  இது பெஸோஸின் முன்னாள் மனைவி ஸ்காட் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு குடியிருப்புகளை நன்கொடையாக வழங்கியதாக அறிவித்துள்ளது. 

லாஸ் ஏஞ்சல்ஸில் மெக்கென்சி ஸ்காட்டின் நன்கொடைக்கு  நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று CCFன் தலைமை நிர்வாக அதிகாரி அன்டோனியா ஹெர்னாண்டஸ் கூறியுள்ளார். 

2021 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை டான் ஜூவெட்டை மணந்த  ஸ்காட், 2019 ஆம் ஆண்டில் ஜெஃப் பெசோஸிடமிருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து வீடுகளின் முழு உரிமையைப் பெற்றதாக நியூயார்க்கின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  2007ம் ஆண்டில் 2.44 கோடி ரூபாய் மதிப்பில் ஜெப் பெஸோஸ் தம்பதி முதல் வீட்டை வாங்கியுள்ளனர். பின்னர் அதே தெருவில் உள்ள இரண்டாவது வீட்டை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் 1.29 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

CCF  தொண்டு நிறுவனமானது தற்போது வீடுகளை விற்க திட்டமிட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஸ்காட்டின் சொத்து மதிப்பு 3700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, அமேசானில் ஸ்காட்டின் பங்கு 4 சதவீதமாகும்.  கடந்த ஆண்டுகளில், இனம், பாலினம் மற்றும் பொருளாதார சமத்துவம் மற்றும் பிற தொண்டுகளுக்காக நூற்றுக்கணக்கான பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார். 

இதையும் படிக்க: கண்டறியப்பட்ட இரண்டு சூப்பர் எர்த்ஸ்..!! மனிதன் வாழ முடியுமா???