கொலம்பியா கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு..!

கொலம்பியா கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்க நாணயங்களை சுமந்துக் கொண்டு சென்று விபத்துக்குள்ளான கப்பல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியா கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு..!

கொலம்பியா கரீபியன் துறைமுகத்தில் இருந்து கடந்த 1708ம் ஆண்டு புறப்பட்ட சான் ஜோஸ் கேலியோன் என்ற கப்பல் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் பல கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள், விலை உயர்ந்த புதையல்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது கொலம்பியா கடற்படை இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. இதன் அருகே மேலும் இரண்டு பெரிய கப்பல்கள் மூழ்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்த கொலம்பியா கடற்படை அதனுள் தங்க நாணயங்கள் இருப்பதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் பல நூற்றாண்டுக்கு முன் மூழ்கிப் போன கப்பலில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கப்பலை மீட்கும் முயற்சியில் கொலம்பியா கடற்படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.