கைலாசாவின் பிரதமராகும் நடிகை ரஞ்சிதா... சீடர்கள் கொந்தளிப்பு!!

நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்தியாவில் இருந்தே தப்பி விட்டதாக கூறிய நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி தனி அரசாங்கம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெனிவா நாட்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பங்கேற்ற பெண் சீடர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார் நடிகை ரஞ்சிதா. 

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் கைலாசா நாட்டின் பிரதமர் பதவிக்கு நடிகை ரஞ்சிதா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி என்னதான் தகுதி படைத்தாரோ ரஞ்சிதா? என்ற கேள்வி பலரின் மனதுக்குள் எழும்பியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கைலாசா கிளைகளின் நிர்வாகத்தில் ரஞ்சிதா அதிக ஆர்வம் காட்டி வருவதாலும், நித்யானந்தாவுக்கு அடுத்த இடத்தை பிடிப்பதற்கு சீடர்களை அழைத்து கூட்டம் போடுவது என இப்படியான சில நடவடிக்கைகள் கைலாசா மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையெல்லாம் கவனித்த கைலாசா வாசிகள், ரஞ்சிதாவுக்கு எதிரான கருத்துக்களை சக பக்தர்களிடம் சொல்லி வேதனை பட்டு வருகின்றனராம். நித்யானந்தாவுக்கு கை கால்கள் அமுக்கி விட்டு, மருந்து மாத்திரைகளை ஊட்டி விட்டதைத் தாண்டி ரஞ்சிதாவிடம் அப்படி என்ன தகுதி இருக்கிறது என பொங்கி வருகின்றனர். 

இந்திய அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு புதிய நாடு உருவாக்கி புதிய அரசு நடத்தி காலம் தள்ளலாம் என காத்திருந்த நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.