கைலாசாவில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்...நித்யானந்தாவை பாராட்டி தள்ளிய ரஞ்சிதா!

கைலாசாவில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்...நித்யானந்தாவை பாராட்டி தள்ளிய ரஞ்சிதா!

கைலாசாவில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ரஞ்சிதா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நித்யானந்தா என்ற பெயரை சொன்னவுடன் நினைவுக்கு வரும் பெயர் தான் ரஞ்சிதா...70 எம்எம் திரையில் தோன்றி வெற்றி பெற்றதை விட, சின்னஞ்சிறு சிசிடிவி வீடியோவால் பிரபலமானவர் ரஞ்சிதா... ஒருகட்டத்தில் நித்யானந்தா தான் தனக்கு சகலமும் என்று பிரகடனப்படுத்தி விட்டு நித்தி உடன் ஐக்கியமானார். 

இதனிடையே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா, தமிழ்நாட்டு போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி வெளிநாட்டுக்கு பறந்து கைலாசா என்ற புதிய தீவை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. 

தற்சமயம் கைலாசாவில் குடிகொண்டிருக்கும் நித்யானந்தா, ரஷ்ய பெண்கள் உள்பட  ஏராளமான சிஷ்ய கோடிகளுடன் பக்தி மார்க்கமாக ஆனந்தம் பேரானந்தம் அடைந்து வருகிறார். இந்நிலையில் கைலாசா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சிதாவின் பேச்சுக்கள் வைரலாகி வருகிறது. 

இதையும் படிக்க : மணிப்பூர் வன்முறை; பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பதிவு தொடக்கம்!

நித்யானந்தா ராஜாங்கம் புரியும் கைலாசாவில் பெண்களில் 98 சதவீதம் பேருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். பெண்களுக்கு முன்னுரிமை என்பதையும் தாண்டி பாதுகாப்பு இங்குதான் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார். கைலாசாவில் கல்வி இலவசம், ஜீவகாருண்யம் பின்பற்றப்படுவதாக தெரிவித்தவர், நித்தியானந்தா ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு ஆசை வார்த்தைகளை பேசி, மேலும் பல இளம்பெண்களுக்கு வலை விரிக்கிறாரா? கைலாசாவில் பெண்களை நிரப்புவதற்கான வேலை இதுவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்பொரு காலத்தில் நித்யானந்தாவுடன் ஆபாச வீடியோவில் சிக்கியவர் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி குறித்து பேசுவதும், நித்யானந்தாவை மகா புருஷர் அளவுக்கு உயர்த்திப் பேசுவதும் காலக்கொடுமை என முணுமுணுக்கின்றனர் நெட்டிசன்கள்.