இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மகுடம் சூடிய தமிழர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் வீரமுத்துவேல்...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மகுடம் சூடிய தமிழர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் வீரமுத்துவேல்...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மகுடம் சூடிய அப்துல் கலாம், சிவதாணு பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா ஆகிய தமிழர்களின் வரிசையில் தற்போது, அறிவியல் வல்லுநர் வீரமுத்துவேல் தடம் பதித்துள்ளார்.

நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் சதீஷ்தவான் ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனர்.

இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிவதாணுப் பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், ஆகியோர் வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானியான வீர முத்துவேல், சந்திரயான் - 3 விண்கலம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளார். சந்திரயான் -1 மற்றும் 2  திட்டங்களை தொடர்ந்து சந்திரயான் - 3 திட்டத்திலும் வீர முத்துவேல் முத்திரை பதித்துள்ளார். 

Scientist Veera Muthuvel: சந்திரயான் 3 விண்கல திட்டத்தில் மாஸ்டர்மைண்டாக  இருந்த தமிழர்!-isro scientist veera muthuvel from tamil nadu mastermind  behind chandrayaan 3 spacecraft - HT Tamil ,தேசம் ...

தாம்பரம் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடிந்த இவர், முதல் நிலை ஆராய்ச்சி படிப்பை ஐஐடியில் நிறைவு செய்துள்ளார். சென்னை ஐஐடியின் ஏரோ ஸ்பேஸ் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீர முத்துவேலுக்கு, 1989-ல் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவது குறித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் சமர்ப்பித்த கட்டுரை இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே பிரபலமாக பேசப்பட்டது. 

ஏனெனில், இவர் கண்டறிந்த தொழில்நுட்பம், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும், ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.  மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீர முத்துவேல், கடந்த 2019 ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம்  நிலவை நோக்கி பயணம் செய்து தற்போது,  விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தளத்தில் தடம் பதித்திருக்கிறது. குறிப்பாக லேண்டர் கருவியின் பகுதியான ரோவர் விண்கல இயந்திரத்தின் சக்கரங்களில் இந்திய குறியீடான அசோகச் சின்னம் மற்றும் இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சந்திராயன் 3 வெற்றிப்பயணத்தின் பெருமை இந்திய நாட்டிற்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் சேரும்.  வரலாற்றில் இனி எத்தனை ஆண்டுகள் 

உலக நாடுகளிலேயே முதன் முதலில் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த பெருமையை  இந்தியா பெற்றிருக்கிறது. இந்த வெற்றிகரமான செயலில் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பும் அடங்கியிருக்கிறது. அவை இன்று உயிர்பெற்றிருக்கிறது. அந்த அறிய பெருமையில் தமிழனாகிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான வீரமுத்துவேலுக்கும் பங்கு உண்டு என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம். 

இதையும் படிக்க   | நிலவை வென்ற இந்தியா: வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்!