எஜமானியின் நடனத்தை கை தட்டி ரசித்த ’வளர்ப்பு நாய்’

தனது எஜமானியின் நளின நடனத்தை, வளர்ப்பு நாய் ஒன்று கைத்தட்டி பாராட்டிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

எஜமானியின் நடனத்தை கை தட்டி ரசித்த ’வளர்ப்பு நாய்’

தனது எஜமானியின் நளின நடனத்தை, வளர்ப்பு நாய் ஒன்று கைத்தட்டி பாராட்டிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

நவீன காலத்திலும், பலரும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை முக்கியமாக கொண்டு உள்ளனர். அவ்வாறு வளர்க்கப்படும் பிராணிகள் செய்யும் சேட்டைகளையும் ரசனையுடன் இணையத்தில் பரவ விடுவதை பல எஜமானர்கள் தவறுவதில்லை. அந்தவகையில் அண்மையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணி தன்னை கைத்தட்டி பாராட்டிய செயலை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பாரம்பரிய பாடலுக்கு நாட்டியம் ஆட, பின்னால் மரத்தில் கட்டப்பட்டிருந்த அவரது வளர்ப்பு நாய் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக கைத்தட்டி பாராட்டியது.

நடனம் முடிந்ததும் அவர் தனது நாயை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.