மெட்ரோ ரயிலில் நடனமாடிய பெண்...! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்...!

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு பல தரப்பில் இருந்தும் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதராபாத் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் நடனமாடிய பெண்...!  நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்...!

வீடியோ வைரல் :

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், மெட்ரோ ரயிலில் ஒரு பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

வீடியோவிற்கு எதிர்ப்பு :

இந்த வீடியோவிற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இது சமூகத்தில் ஒரு வெறுப்பூட்டக்கூடிய செயல் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சில இணையவாசிகள், 'பொது போக்குவரத்தில் ஏன் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகின்றன?' என்ற கேள்வியையும் கேட்டு வருகின்றனர். இதில் சிலர் அந்த பெண்ணிற்கு சாதகமாகவும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மெட்ரோ நிர்வாகத்தின் முடிவு : 

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் நடனமாடிய இந்த பெண்ணுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் வந்த நிலையில், அந்த மெட்ரோ நிர்வாக அதிகாரிகள், அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.