பள்ளி முதல்வரும் பியூனும் தடியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரல்!

பள்ளி முதல்வரும் பியூனும் தடியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரல்!

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் பள்ளி முதல்வரும் பியூனும் ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேதினி நகரில் உள்ள ஒரு பள்ளியில் வேலையை முறையாக செய்யாததாகக் கூறி, பள்ளி முதல்வர் கருணாசங்கர் பியூன் ஹிமான்ஷு திவாரியை திட்டியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கோவமுற்று பியூனை இழுத்து சண்டையிடவே, ஆத்திரத்தில் ஹிமான்ஷு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பிற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், தடியை எடுத்து மாறி மாறி அடித்தும் இழுத்தும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.