தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி..! இணையத்தில் குவியும் கமெண்ட்ஸ்..!!

தன்னை ஏமாற்றிய காதலனை அவரது வீட்டுக்கே சென்று வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி..! இணையத்தில் குவியும் கமெண்ட்ஸ்..!!

காதலுக்கு தேவையே ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டும் என்பது தான். உறவுகளில் நம்பிக்கை என்பது இல்லையென்றால் அது முதலில் விரிசலை உண்டாக்கி பிரிவை ஏற்படுத்தும். அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்குள் பழிவாங்கும் எண்ணத்தையே தோற்றுவிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நியூயார்க்கில் நடைபெற்றுள்ளது. அதாவது ஒரு காதலி தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து உள்ளார். இந்த சம்பவம், சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அப்படி என்ன பண்ணிவிட்டார் என்று கேட்கிறீர்களா..? அந்த பெண்ணின் காதலர் அவரிடம் உண்மையற்றவராக நடந்து கொண்டு வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் தெரிய வந்ததும், ஆத்திரத்தில் என்ன செய்வது என தெரியாமல், அவரது வீட்டுக்கே சென்ற  காதலி, காதலரின் விலையுயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என தேடி பார்த்து உள்ளார். அப்போது மேசை டிராயரில் இருந்த காதலரின் பிறப்பு சான்றிதழை எடுத்து இதுவே சரியான பதிலடியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

பின்பு, அந்த உண்மையான ஆவணம் அவனுக்கு எதற்கு என முடிவு செய்து, அதனை நன்றாக கிழித்து எறிந்து விட்டார்.  அதனுடன் நின்று விடவில்லை.  காதலர் உயிருடன் இருப்பதற்கான எந்த சான்றும் இல்லை என எழுதியும் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்த விவரங்களை எல்லாம் காதலியின் தோழி சமூக ஊடகத்தில் பரவ விடவே, ஒரு கட்டத்தில் காதலருக்கும், காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியபோது, வாயை மூடு.  நீ இப்போது உயிருடனேயே இல்லை என காதலி ஆவேசமுடன் கத்தியுள்ளார்.

இந்த விவரங்களையெல்லாம் இணையத்தில் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை பல வகைகளில் பதிவிட்டு உள்ளனர்.  ஒருவர், காதலியின் செயல் சரி என நான் கூறவில்லை.  ஆனால் அவரது செயல்கள் வேடிக்கையானவை என தெரிவித்து உள்ளார். மற்றொருவரோ, நான் தரையில் உட்கார்ந்து வயிறு வலிக்க சிரித்து விட்டேன்.  அதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.