காவலர்களையே பழிக்கு பழி வாங்கிய மின் ஊழியர்....!!!!

காவலர்களையே பழிக்கு பழி வாங்கிய மின் ஊழியர்....!!!!

தலைக்கவசம் அணியாததற்காக 6,000 ரூபாய் அபராதம் விதித்ததை அடுத்து, தானா பவன் காவல் நிலையத்தின் மின் இணைப்பை லைன்மேன் துண்டித்துள்ளார்.

முகமது மெஹ்தாப், மின் இணைப்பை துண்டிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

"எனது மாதச் சம்பளம் ரூ. 5,000, அதே சமயம் எனக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ. 6,000. என்னை மன்னிக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டேன், எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன் என்று சொன்னேன், ஆனால் அவர்கள் கருணை காட்டவில்லை" என்று மெஹ்தாப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், மின்கம்பியை துண்டித்ததற்கு மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறினர்.

மின்வாரிய இளநிலை பொறியாளர் அமிதேஷ் மவுரியா கூறுகையில், காவல் நிலையத்தில் ரூ. 55,000-க்கும் அதிகமான நிலுவைத் தொகை இருப்பதாகவும், அதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்க மவுரியா மறுத்துவிட்டார். 

துணை கோட்ட அலுவலர் புஷ்ப் தேவ் கூறுகையில், "இது (மின் இணைப்பு துண்டிப்பு) பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. மின்கம்பியில் சில கோளாறுகள் ஏற்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது," என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தானா பவன் காவல் நிலைய எஸ்ஹோ அனில் குமார் சிங் கூறுகையில், "சிறிது நேரம் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: திருக்குறளின் உண்மையான கருப்பொருள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டதா?