மூச்சுவிட முடியல... நெஞ்சு வலிக்குது....மருத்துவர்களும் என்னைய வந்து பார்க்கல... நோயாளி வெளியிட்ட கண்ணீர் வீடியோ!!

மூச்சுவிட முடியல... நெஞ்சு வலிக்குது....மருத்துவர்களும் என்னைய வந்து பார்க்கல... நோயாளி வெளியிட்ட கண்ணீர் வீடியோ!!

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர்,  மருத்துவர்கள் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கண்ணீர் விட்டு அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கவலையடைய செய்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி போயுள்ளன. இதனிடையே அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர், தனக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்றும், நெஞ்சு வலிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்டதோடு சரி அதன் பின் மருத்துவர்கள் ஒரு ஊசிப்போடுவதற்கு கூட தன் பக்கம் வர வில்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். இப்படியாக இருந்தால் தான் செத்துவிடக்கூடும் என கூறி அவர் மூச்சுத்திணறலோடு இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், காண்போரை கவலையில் ஆழ்த்தியதோடு மட்டுமின்றி, மக்களிடையே அரசு மருத்துவமனை பற்றி ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.