டுவிட்டரில் பிரபல நடிகர்கள் பெயர்களின் ஹாஷ்டகுகளுக்கு பின்னால் ஆடு எமோஜி..!

#விஜய் #அஜித் #சூர்யா #விராட்கோஹ்லி என்று ஹாஷ் டாக் போடும்போது அந்த பெயரின் பின்னால் ஆடு எமோஜி வரும்

டுவிட்டரில் பிரபல நடிகர்கள் பெயர்களின் ஹாஷ்டகுகளுக்கு பின்னால் ஆடு எமோஜி..!

டுவிட்டரில் பிரபல நடிகர்கள் பெயர்களின் ஹாஷ்டகுகளுக்கு பின்னால் ஆடு எமோஜி வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

பொதுவாக ரசிகர்கள் ஏதாவது புது படங்கள் வந்தாலோ அல்லது ஏதாவது பிரபலங்கள்  அப்டேடுகளை வழங்கினால் அதனை டுவிட்டரில் ரிடுவீட் செய்து ட்ரெண்டாக்குவது வழக்கம். அப்போது ஹாஷ்டாகுகளை பயன்படுத்துவர். ஹாஷ் டாக் பயன்படுத்தினால் அதனை பற்றி பார்ப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும்.தற்போது சினிமா பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பிரபலங்களின் பெயரை ஹாஷ் டாக் செய்யும் போது அதன் பின்னால்  ஆடு எமோஜி வருகிறது. அதற்கான பொருள் ஆங்கிலத்தில் அதன் பெயரே ஆகும். ஆடு என்றால் ஆங்கிலத்தில் "கோட்". 

அதன் விரிவாக்கம் ”கிரேட்டெஸ்ட் ஆப் ஆல் டைம்” என்பதேயாகும். எடுத்துக்காட்டாக #விஜய் #அஜித் #சூர்யா #விராட்கோலி என்று ஹாஷ் டாக் போடும்போது அந்த பெயரின் பின்னால் ஆடு எமோஜி வரும். அதாவது,அந்த பிரபலங்கள் அவரவர்களின் துறையில் சாதித்தவர்கள் என்பதையே டுவிட்டர் அப்படி ஒரு அப்டேடாக கொடுத்திருக்கிறது.அந்த ஆடு எமோஜி வருவது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.