வாழைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளிக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்க உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு...

வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த ஒருவருக்கு இழப்பீடாக ரூபாய் நான்கு கோடி கொடுத்துள்ள நிறுவனம் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளிக்கு  ரூ.4 கோடி இழப்பீடு வழங்க உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு...

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் குக்டவுனுக்கு அருகில் உள்ள ஒரு பண்ணையில் ஜெமி லாங்போட்டம்  என்பவர் வேலை செய்துகொண்டிருந்த போது, அவர் தலையில் 70 கிலோ எடையுள்ள வாழைபழ தார்  விழுந்தது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.  கடந்த 2016ஆம் ஆண்டு அந்த தொழிலாளி வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் அதற்கு பின்னால் எந்த வேலையும் செய்ய முடியாததால் இழப்பீடு வேண்டும் என்று கோரி ஜெமி லாங்போட்டம்  ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி ரூபாய் 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த தொழிலாளிக்கு 4 கோடி இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.