“சாதி பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு  இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள். 

“சாதி பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும்" -  தமிழக அரசுக்கு  இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள். 

சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் சீனுராமசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். 

மேலும், எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட தமிழ்நாடு முதலமைச்சரிடம் வேண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் படிக்க     | பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளான பெண்களுக்கு,.. மகுடம் சூட்டும் அங்கீகாரம் தான் இந்த தீர்ப்பு....!