குழந்தை இல்லாத விரக்தி,.. இளம்பெண் விபரீத முடிவு : "காரணம் இவர்கள்தான்" என குறிப்பிட்டு வீடியோ பதிவு...!

குழந்தை இல்லாத விரக்தி,..  இளம்பெண்  விபரீத முடிவு  : "காரணம் இவர்கள்தான்" என குறிப்பிட்டு வீடியோ பதிவு...!

புதுச்சேரியில் திருமணமாகி 4 வருடங்களாகியும் குழந்தை இல்லாத விரக்தியில்  இளம்பெண்  வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது. தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என குறிப்பிட்டு வீடியோவும் பதிவிட்டுள்ளார்.  

புதுச்சேரி கிராம பகுதியான திருக்கனூர் ரோஜா நகர் கே.மனவேலியை சேர்ந்தவர்கள் அரவிந்த - மோனிகா (23) தம்பதியினர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர், இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.  இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை  வருவது வழக்கம்  எனக்  கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 25 -ஆம் தேதி மாலை மோனிகா தனது தாய் உண்ணாமலையிடம் தனது கணவர்க்கும் தனக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை கூறியுள்ளார். அப்போது நாளை வந்து நேரில் பார்ப்பதாக உண்ணாமலை கூறியுள்ளார்.  பின்னர் மறுநாள் 26 ஆம் தேதி காலை உண்ணாமலை தனது மகளுக்கு செல்போன் மூலமாக பலமுறை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவர், மதியம் திருக்கனூர் பகுதியில் உள்ள தனது மூத்த மகளான சரன்யாவை மோனிகாவை வீட்டில் போய்  பார்க்க சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, அவர் சென்று பார்த்த போது கதவு மூடி இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது, தனது தங்கை கல்யான புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, இது தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே நேற்று மோனிகாவின் செல்போனை அவரின் உறவினர்கள் ஆய்வு செய்தபோது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. 

அதில் 'தனது கணவர் அரவிந்த குழந்தை இல்லை என்பதற்காக  தன்னை தலையில் அடித்ததாகவும், "உன்னால குழந்தை பெற்று தர முடியவில்லை; நான் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று காண்பிக்கிறேன்",  என்றும், " உன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு செல்",  என அடித்ததாகவும், இதனால் மனமுடைந்து,  தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், "தனது கனவரை சும்மா விட கூடாது",  என்றும் "அக்கா மற்றும் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளும்படியும்',  அழுதபடியே தனது தாய்க்கு அவர் அந்த வீடியோ பதிவை செய்துள்ளார்.

 தற்போது இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் திருக்கனூர் போலீசார் கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து மோனிகா தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த அவரது பாட்டி அதிர்ச்சியில் உயிரழந்துவிட்டார்.

 மேலும் கணவன் தாக்கியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதில் மோனிகா திருமணம் செய்து கொண்டவர,  அவரது  தாயின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    | "மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை : நடந்தது இதுதான் " ...! சுங்கத்துறை விளக்கம்.