777 சார்லி படத்தைப் பார்த்து கதறியழுத கர்நாடக முதல்வர்...! வைரலாகும் புகைப்படங்கள்

777 சார்லி படத்தைப் பார்த்து கதறியழுத கர்நாடக முதல்வர்...! வைரலாகும் புகைப்படங்கள்

777 charlie படத்தைப் பார்த்து, தான் வளர்த்த நாயை நினைவுகூர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிரண்ராஜ் இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியான இப்படம், வளர்ப்பு நாய் உடனான பாசப்பிணைப்பை வெளிப்படுத்துவது போல் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து, தான் வளர்த்த நாயை நினைவு கூர்ந்து அழுத பசவராஜ் பொம்மை, நாயின் அன்பு கட்டுக்கடங்காதது என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

பசவராஜ் பொம்மை ஆசையாக வளர்த்து வந்த ஒரு நாய் கடந்த ஆண்டு இறந்தபோது அதனை அவர் கட்டிப்பிடித்து கதறி அழுத புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.