"தொழில் 4.0" புதிய தொழில்நுட்ப மையங்கள் திறப்பு!

"தொழில் 4.0" புதிய தொழில்நுட்ப மையங்கள் திறப்பு!

தமிழகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிலுள்ள 45 ஐடிஐ-களில், புதிதாக தொழில் 4.0 என்னும் தொழில்நுட்ப மையங்கள் இன்று திக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மைய தொடக்க விழா நடைபெற்றது.

தொழில் போர் 4.0 தொழில் நுட்ப மையத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி மூலம், தொழில்நுட்ப மையத்தினை தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானிட்டாம் வாரிஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து மையத்தினை பார்வையிட்டனர்.

அதி நவீனமாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தில், பேசிக் டிசைனர் அண்ட் விர்ச்சுவல் வெரிஃபையர், அட்வான்ஸ் CNC மெசினிங் டெக்னீசியன் மேனுபேக்ச்சரிங், ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் மற்றும் இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் ஆகிய நான்கு தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருட பிரிவு படிப்புக்கான கல்வி தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க: என் நெஞ்சுல சுடு... நீதிமன்ற காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஆசாமி!!