சந்திரயான் குறித்த விழிப்புணர்வு; விக்ரம் லேண்டர் மினியேச்சர் உருவாக்கம்!

சந்திரயான் குறித்த விழிப்புணர்வு; விக்ரம் லேண்டர் மினியேச்சர் உருவாக்கம்!

சந்திரயான் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னையை சேர்ந்த ஒருவர், விக்ரம் லேண்டர் போன்ற மினியேச்சரை உருவாக்கி உள்ளார். 


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்து சாதனை படைக்கவுள்ள நிலையில், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் விக்ரம் லேண்டர் போன்ற மினியேச்சரை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

இதையும் படிக்க : சக மாணவனின் வாட்சப் டிபி-யில் "அம்பேத்கர்"... மாணவர்களுக்குள் கலவரம்!!

இந்த மினியேச்சர் லேண்டரை உருவாக்குவதற்கு ஒரு வார காலம் எடுத்துக் கொண்டதாகவும், இந்தியாவின் வெற்றியை கொண்டாட கூடிய வகையில் இந்த மினியேச்சர் லேண்டரை வடிவமைத்ததாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.