சந்திரயான் 3 - வெற்றிகரமாகப் பிரிந்தது லேண்டர்...!

சந்திரயான் 3 - வெற்றிகரமாகப் பிரிந்தது லேண்டர்...!

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக விண்கலத்தைப்  பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து எந்த தொழில்நுட்பக் கோளாறும் இன்றி சந்திரயான் 3 விண்கலம் சுற்றி வந்தது. 

இதையும் படிக்க : "லிஸ்ட் ரெடி அறிவிப்பு எப்போது?? - தொண்டர்கள் வெயிட்டிங்...

இந்த நிலையில் விண்கலத்தில் உள்ள Propulsion module எனப்படும் உந்து கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள 4 திரவ என்ஜின்களை இயக்கி லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தடம்பதித்து 14 நாட்கள் தனது ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து லேண்டர் தூரத்தைக் குறைக்கும் பணி நாளை 4 மணிக்கு தொடங்குகிறது. நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.