பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவிடம் லஞ்சம்...  2 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்...

திருக்கோவிலூரில் போக்சோ வழக்கில் லஞ்சம் வாங்கிய 2 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவிடம் லஞ்சம்...  2 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பேத்தியுடன் தகாத உறவில் இருந்ததால் அவர் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பருடைய உதவியுடன், மணம்பூட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியை சந்தித்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் அந்த சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை முதியவர் தென் பெண்ணை ஆற்றில் புதைத்துள்ளார்.

இந்த தகவல் ஊர் முழுவதும் வேகமாக தெரியவந்தது. இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து போலீசார் முனியாண்டிக்கு உதவியாக இருந்த இந்திராணி, ஓய்வுபெற்ற செவிலியர் ராஜாமணி ஆகிய 3 பேரின் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இந்த நிலையில், ராஜாமணி மீது வழக்கு பதியாமல் இருக்க அவருடைய உறவினரிடம் பேசி போலீசார் 23 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய வந்த ஆய்வாளர் இளவழகி, தலைமை காவலர் கீதாராணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். தலைமை காவலர் கீதாராணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.