தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்!

தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்!

விராலிமலையில் அரசால் தடைசெய்யப்பட்ட 180 கிலோ புகையிலை பொருட்களை மினி லாரியில் விற்பனைக்காக கடத்தி வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இரகசியத் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று தனிப்படை போலீசார் விராலிமலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருச்சியில் இருந்து வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

குட்கா பறிமுதல்

அப்போது அந்த லாரியில் தடை செய்யப்பட்ட  ரூ-1.11 லட்சம் மதிப்பிலான 180 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இந்த புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் விற்பனைக்காக  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திலக்குமார், மணிகண்டன், முருகன், ராஜா ஆகிய நான்கு பேர் விராலிமலை பகுதிக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

 தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க முயன்ற நான்கு பேரையும் கைது செய்த விராலிமலை போலீசார் அவர்கள் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தனிப்படை போலீசார் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வரும் நபர்களை கைது செய்து சிறையிலடைத்து வரும் சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.