விமரிசையாக நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா!

விமரிசையாக நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா!

திண்டுக்கல் அருகே வெகு விமரிசையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் திருவிழா - 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குரும்பட்டியில் பட்டவன்,மதுரை வீரன் கோவில்கள் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி தொடங்கியது

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 மந்தைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாடுகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகளை அவிழ்த்து விட்டனர்

மாடுகள் எல்லை கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் வெற்றி பெற்ற மாட்டுக்கு சமூக வழக்கப்படி 3 பெண்கள் மஞ்சள்நீரை தெளித்து எலுமிச்சம் பழத்தை வெற்றி பரிசாக வழங்கினர்.

அதனையடுத்து மஞ்சள் தெளித்த 3 பெண்களும் எல்லைக்கோட்டில் இருந்து தாரை தப்பட்டைவுடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்

இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க: கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடக்கம்!