நீட் தேர்வில் 4 வது இடம் பிடித்த திருவண்ணாமலை மாணவி!

நீட் தேர்வில் 4 வது இடம் பிடித்த திருவண்ணாமலை மாணவி!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவி நீட் தேர்வில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வந்தவாசி அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சாதேவி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனனர். மூன்றாவது மகளான ரோஜா என்பவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவிட்டு, திருவண்ணாமலை சண்முகா அரசு மாடல் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். ரோஜாவிற்கு மருத்துவராக வேண்டும் என்று சிறுவயதில் முதல் ஆசை இருந்து வந்த நிலையில், தன்னுடைய கடுமையான படிப்பு மூலம் இரவும் பகலமாக படித்து வந்த ரோஜாவிற்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது, அப்போது 12 நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் நீட் தேர்வு எழுத முடியவில்லை.

மேலும், மனம் தளராத ரோஜா மீண்டும் முயற்சி செய்து நீட் தேர்வு எழுத முடிவெடுத்தார். அப்போது நீட் தேர்வு எழுதுவதற்கு ரோஜா இரவும் பகலும் ஆக கடுமையாக படித்து தன்னுடைய வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வு எழுதினார். இதில் ரோஜாவிற்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது நீட் தேர்வில் 544 மதிப்பெண்கள் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டில்  நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ரோஜா மருத்துவராகி பின் தங்கிய கிராமமாகிய அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ரோஜாவிற்கு கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க || "எல்லோருக்கும் சமூக பொறுப்பும், அக்கறையும் இருக்க வேண்டும்" - நடிகர் சூர்யா!