விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருநெல்வேலியில் போராட்டம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருநெல்வேலியில் போராட்டம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 21000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 21,000 வழங்க வேண்டும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவச பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியுசி மாவட்ட தலைவர் காசி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்