கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கல்லூரி நேரத்தில் போதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மாணவர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கல்லூரி நேரத்தில் போதிய பேருந்துகளை இயக்கக் கோரியும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் அவல நிலை இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுப்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரி நேரத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் அவல நிலை இருப்பதாகவும் அதனால் கல்லூரி நேரத்தில் போதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மாணவர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை

ஆனால் அந்த கோரிக்கை இதனால் வரை நிறைவேறாத நிலையில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி விபத்துகளை சந்திக்க நேரிடுவதாகவும் அதனால் உடனடியாக மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான போதிய பேருந்து வசதிகளை கல்லூரி வேலையில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கந்தர்வக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.