முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு...புதிய ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு...புதிய ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

சிப்காட்  தொழிற்பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. 


சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கூட்டம் நடைபெற்றது.  அப்போது, உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டின் பெள சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், உளுந்தூர்பேட்டை சிப்காட்  தொழிற்பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இதையும் படிக்க : ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

இதன்மூலம் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2302 கோடி முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.