இன்று தாக்கலாகிறது வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்!

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இன்று தாக்கலாகிறது வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்!

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வேளாண் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தேர்தல் அறிக்கையில், வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, தி.மு.க., அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், முதல் முறையாக, வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நேற்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போல, இன்று வேளாண் பட்ஜெட்டும், காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

வேளாண் பட்ஜெட்டில், வேளாண் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு விபரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.