சிவாஜி சிலையை திறக்க அனுமதி மறுப்பா? சீமான் கண்டனம்!

சிவாஜி சிலையை திறக்க அனுமதி மறுப்பா? சீமான் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி மாநகரின் மையப்பகு தியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையைத் திறப்பதற்கு அனும தியளிக்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத் திற்குரியது.

நடிப்புக்கலையில் தலைமை பல்கலைக்கழகமாக விளங்கிய ஆகப்பெரும் தமிழ்க்கலைஞரின் சிலையினைத் தமிழ்நாட்டிலேயே திறக்க முடியாத அவல நிலை நிலவுவது தமிழ் இனத் திற்கே ஏற்பட்ட பேரவமானமாகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர் பெரு மக்களால் திருச்சி மாநகர் பாலக்கரை பகு தியில் கடந்த 2011-ம் ஆண்டுப் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட சிலையை திறக்க பல முறை முயற்சித்தும் 10 ஆண்டு கால அ. தி.மு.க. ஆட்சியில் அனும தி தரப்படவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் தி.மு.க. அரசும், கடந்த அ. தி.மு.க. அரசினைப்போலவே சிலையைத் திறக்க அனும தி மறுப்பது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மக்கள் அனைவரிடமும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத் தி உள்ளது. சிலையைத் திறக்க வேண்டி ரசிகர்கள் சார்பில் ஆட்சியாளர்கள் முதல் அரசு அ திகாரிகள் வரை பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அனும தி அளிக்கப்படாதது அவரது மங்காப் புகழ் மீதான காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.

இந் தி மொழி திரைப்பட நடிகர்களுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட அயல் நாடுகள் கூட சிலை திறந்து, மரியாதை செய்கின்றன. தமிழ் நாட்டிலும் வேற்று மொழி நடிகர், நடிகைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் அனும தித்துவிட்டு, தமிழ்நாடு அரசு தம் சொந்த மண்ணின் மகனது சிலையைத் திறக்க அனும தி அளிக்காமல் காலம் தாழ்த்துவது மறைந்த அந்த மகத்தான கலைஞனுக்கு செய்யும் மாபெரும் அவமரியாதையாகும்.

ஆகவே, இந்த நூற்றாண்டின் இணையற்ற திரைக்கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சி பாலக்கரை பகு தியில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக அனும தி அளிக்க வேண்டும். மேலும் தாம தித்தால் நடிகர் திலகத் தின் பிறந்த நாளான அக்டோபர் 1-ந் தே தி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அ தில் கூறப்பட்டுள்ளது.