ஆன்லைன் வகுப்புகளுக்கு இனி கட்டுப்பாடு.. வருகிறது புதிய நடைமுறை... அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

ஆன்லைன் வகுப்புகளுக்கு இனி கட்டுப்பாடு.. வருகிறது புதிய நடைமுறை... அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் வரம்பு மீறிய செயலில் ஈடுபடுவார் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை என தெரிவித்தார். ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து அரசு கவனத்துடன் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். நல்ல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக,  பாலியல் புகார் குறித்து விசாரிக்க பள்ளிகளில் குழு அமைக்கப்படும் எனவும் கூறினார்.

இதனிடையே 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்து பேசிய அன்பில் மகேஷ், அதுதொடர்பாக முதலமைச்சருக்கு, விரைவு அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்துக்கு தீர்வுகாணும் வகையில், வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.