தனியார் கட்டுமான நிறுவனத்தில் தலையிட்ட உ.பி,.. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய திமுக.!

தனியார் கட்டுமான நிறுவனத்தில் தலையிட்ட உ.பி,.. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய திமுக.!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆர்.பாலு. இவர் திமுக தென்மேற்கு மாவட்டம் கிழக்கு மயிலாப்பூர் பிரநிதியாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தபின் மைலாப்பூர் பகுதியில் நடந்த தனியார் கட்டுமான  நிறுவனத்தில்  தலையிட்டதாக திமுக தலைமைக்கு புகார் சென்றது. 

திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுக பிரமுகர்கள் சிலர் அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களை கட்சியில் இருந்து நீக்கியது திமுக. அப்போதே இது போன்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை அறிவித்தது. 

அதன்படி தற்போது மைலாப்பூர் பகுதியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஆர்.பாலுவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.