மக்களைத்தேடி மருத்துவம்: விரைவில் தொடங்கப்படும்! துணை ஆணையர் மணிஷ் தகவல்!!

தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ் தெரிவித்துள்ளார்.

மக்களைத்தேடி மருத்துவம்: விரைவில் தொடங்கப்படும்! துணை ஆணையர் மணிஷ் தகவல்!!

மக்களைத்தேடி மருத்துவம்: விரைவில் தொடங்கப்படும்! துணை ஆணையர் மணிஷ் தகவல்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புத்தக விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக புத்தகம் வினியோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு கொரொனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ் துவக்கி வைத்த பின்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அரசு அலுவலகங்கள், கோயம்பேடு மார்க்கெட் மீன் விற்பனையகங்கள் உள்ளிட்டவைகளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 2 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 320 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இணை நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளன அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டி. பி நோயாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி - 1696 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி - 91 பேர் போடப்பட்டுள்ளது.

அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 3784 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 88 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும்,  பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 3739  பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 88  பேருக்கும் போடப்பட்டுள்ளது என்றார்.

தமிழக அரசு சார்பில் மக்கள் தேடி மருத்துவம் இந்தத் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை விரைவில் தொடங்கப்படும் என்ற அவர், இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் வீடுதோறும் சென்று இந்த பணியினை மேற்கொள்வார்கள் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.