மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-முத்தரசன்!

தற்போது தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களை இராணுவம் கைப்பற்றி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது.

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-முத்தரசன்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு குழு கூட்டம் நேற்றைய தினம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது . இதில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கட்சியின் தமிழ்நாடு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இன்று ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சுப்ரமணியசாமி வழக்கு

அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி மதசார்பினமை, சோஷியலிசம் போன்ற வார்த்தைகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தனிப்பட்ட முறையில் போடப்பட்ட வழக்கா, இல்லை பிஜேபி சார்பில் போடப்பட்ட வழக்கா என்று தெரியப்படுத்த வேண்டும். சுப்பிரமணிய சுவாமி தனிப்பட்ட முறையில் அவர் வழக்கு தொடுத்திருந்தால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும்.பாரதிய ஜனதா கட்சி ஒப்புதலோடு வழக்கு தொடுத்திருந்தால் பாரதிய ஜனதாவை தடை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில். தமிழ்நாடு அரசு சார்பில் மருத்து, உணவு பொருட்கள் வழங்கி சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களை இராணுவம் கைப்பற்றி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது.

எனவே தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும்.தமிழர்களின் உரிமைகள், உடைமைகளை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

மின் கட்டண உயர்வு

இந்திய அரசின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வு மக்கள் மேலும் துயரத்திற்க்கு உள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதலைமைச்சர் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பேட்டியளித்தார் . இந்நிகழ்வின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவருமான கே.சுப்பராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.