கருப்பு - சிவப்பு கொள்கையாளர் பாதையில் புகழ்மாலைகள் குவியட்டும்.. குவெம்பு விருது பெறும் எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் பாராட்டு..!

தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்தவர் எழுத்தாளர் இமையம் - விருதுக்குழுவினர் பாராட்டு

கருப்பு - சிவப்பு கொள்கையாளர் பாதையில் புகழ்மாலைகள் குவியட்டும்.. குவெம்பு விருது பெறும் எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் பாராட்டு..!

இமையத்திற்கு குவெம்பு விருது

மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் கன்னட தேசிய கவி "குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கன்னட தேசிய குவெம்பு விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம். அவரின் பெரும்பாலான படைப்புகளைப் பெண்ணியத்திற்கான காணிக்கையாகக் கருதலாம் என எழுத்தாளர் இமையத்தை விருதுக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.


சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

தமிழ்நாட்டில் மிக பிரபலமான எழுத்தாளரான இமையம், கடலூரில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் வெ.அண்ணாமலை, தான் எழுதிய "கோவேறு கழுதைகள்" என்னும் நாவலின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். இவரின் "செல்லாத பணம்" என்ற புதினத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.


முதலமைச்சர் வாழ்த்து

எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இலக்கியவாதிகள்,பெண்ணியவாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இமையத்திற்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

கருப்பு சிவப்பு கொள்கையாளர்

இதனை தொடர்ந்து கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன் என்றும், திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் 
பக்கத்தில் எழுத்தாளர் இமையத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

- லெனின் பிரபா

மேலும் படிக்க: உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய எழுத்தாளர் அருந்ததி ராய்..!