கோத்தகிரியில் விவசாயிகள் போராட்டம்!

கோத்தகிரியில் விவசாயிகள் போராட்டம்!

நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே கடைகம்பட்டி  கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கப் பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஊர் நாட்டாமை கண்ணப்பன் மற்றும்  ஊர் நிர்வாகிகள்  முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேயிலைக்கான குறைந்தபட்ச விலை

பச்சை தேயிலை குறைந்த பட்சம் 30 ரூபாயை நிர்ணைய செய்ய வேண்டும் , படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 8 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இது  கூலி மற்றும் தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லைபசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும் . மேலும் தேயிலை வாரியம்  வழங்கும் கல்வி உதவித் தொகையை அனைத்து  விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு  தேயிலை  ஏல மையத்தில் குறைந்த பட்சம்  150 க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டுமென வியாபாரிகளிடம் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆவின் பாலகங்களில் தேயிலை

மேலும் தமிழ்நாட்டில் உள்ள  நியாயவிலை கடைகள், ஆவின் பால் விற்பனையகங்களிலும் தேயிலை தூளை விற்பனை செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து  சொகுசு பங்களாக்கள் மற்றும் காட்டேஜ்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோத்தகிரி பகுதியில் அதிக அளவில் வீடு கட்டி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்  எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உண்ணாநிலை போராட்டம்

குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி மலை மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது எனவும், கோத்தகிரியில் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி உழவர் சந்தை விரைந்து அமைக்க வேண்டும். விவசாய பயிர்களை அழித்து வரும்  காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.