அரசு லாட்டரி சீட்டு விற்கணும்...  வருவாயை பெருக்க கார்த்தி சிதம்பரம் பலே ஐடியா!!

அரசு லாட்டரி சீட்டு விற்கணும்...  வருவாயை பெருக்க கார்த்தி சிதம்பரம் பலே ஐடியா!!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தடுப்பூசி போடுவது குறித்து, பொதுமக்களிடையே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. அதைப் போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் ஒரே வழி எனக் கூறினார்.

மேலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என்றும், பாஜகவை தவிர எந்த கட்சியும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஹிந்தியை வளர்க்க தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு வருவாயை பெருக்க மீண்டும் லாட்டரி விற்பனையை கொண்டு வரவேண்டும் என்றும், லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.