விவசாயியை தாக்கிய வனத்துறை அதிகாரிகள்…மக்கள் போராட்டம்!

விவசாயியை தாக்கிய வனத்துறை அதிகாரிகள்…மக்கள் போராட்டம்!

பென்னாகரம் அருகே விவசாய தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயியை தாக்கிய வனத்துறையினர்

தர்மபுரி மாவட்டம் பத்ர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கூழிக்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் அர்த்தனாரி வயது 40. விவசாயி.  கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு வன சரகர் ஆலயமணி தலைமையிலான தனிப்படை வனத்துறையினர் அர்த்தனாரி வீட்டிற்குச் சென்று நாட்டுத் துப்பாக்கி எங்கே வைத்துள்ளாய் என கேட்டுள்ளனர். தெரியாது எனக் கூறிய நிலையில் வனத்துறையினர் அர்த்தநாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதை தடுக்க வந்த அர்த்தனாரி மனைவி சுதா மற்றும் குழந்தைகளையும் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வனத்துறையினர் அர்த்தநாரியை சின்னம்பள்ளியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்துள்ளனர். மேலும் வனவிலங்குகளை வேட்டை ஆடியதாக வழக்கு பதிவு செய்து ரூபாய் 15 ஆயிரத்தை அபராதமாக வசூலித்துள்ளனர். வனத்துறையினர் தாக்கியதில் காயம் அடைந்த அர்த்தனாரி மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

வட்டாட்சியரிடம் மனு

இது தொடர்பாக அர்த்தனாரி மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தி பொய் வழக்கு போட்ட வனத்துறையினரை கண்டித்து  பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிட்ட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தில் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றியத்தை சார்ந்த விவசாயிகள் மலைவாழ் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பென்னாகரம் வட்டாட்சியர் அசோக் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது...