”சார் ஜெயில் வந்திருச்சு” சிறைக்கு போகும் கவலை இல்லாமல் அசந்து உறங்கிய ராஜேந்திர பாலாஜியை எழுப்பிய போலீஸ்!..

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் வாகனத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.

”சார் ஜெயில் வந்திருச்சு” சிறைக்கு போகும் கவலை இல்லாமல் அசந்து உறங்கிய ராஜேந்திர பாலாஜியை எழுப்பிய போலீஸ்!..

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 20 நாட்களாக மிக தீவிரமாக தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டிஸ் விடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓசூரில் கைது செய்த தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வந்தனர். விடிய விடிய உறக்கமின்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற ஜாமின் மனு குறித்து எடுத்துரைத்து அவருக்கு ஜாமின் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தனக்கு ஏ கிளாஸ் அறை வழங்குமாறு ராஜேந்திரபாலாஜி வைத்த கோரிக்கை ஏற்கப்பட்ட, அவரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போலீசார் அவரை அலைக்கழிக்கும் விதமாக திருச்சி சிறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். நேற்றிலிருந்து ஒரே ஆடையை மட்டுமே அணிந்திருந்த அவர், வழக்கமான தனது வேட்டி, சட்டை உடைக்கு மாறினார். பின்னர் போலீஸ் வாகனத்தில் ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட்டார். 

தொடர்ந்து இரண்டு நாட்கள் உறக்கம், ஓய்வு இல்லாத நிலையில், சிறை வாசலுக்கு வாகனம் வந்து, ராஜேந்திரபாலாஜி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை வீடியோ எடுத்த  போதும், அதை கூட அவரால் உணர முடியவில்லை. அந்த அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.