சாக்லேட் வடிவத்தில் கஞ்சா விற்பனை...ஜி.கே.மணி குற்றச்சாட்டு!

சாக்லேட் வடிவத்தில் கஞ்சா விற்பனை...ஜி.கே.மணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கஞ்சா சாக்லேட் வடிவத்தில் விற்பனை செய்யப்படுவதாக பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி குற்றச்சாட்டு.

ஜி.கே.மணி பேச்சு

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது .

போராட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி தலைமை ஏற்று  பேசும்போது, தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா சாக்லேட் வடிவில் விற்கப்படுவது. காவல்துறை நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும். தங்கு தடை இல்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் கஞ்சாவை சாக்லேட் களாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள் இவை பள்ளிகளின் முன்பாகவும் மாணவர்கள் தங்கும் தங்கும் விடுதிகள் அருகிலும் விற்கப்படுகிறது.

அனைத்து பகுதிகளிலும் விற்கப்படும் போதை பொருட்கள்

பேரூராட்சி. நகராட்சி மாநகராட்சி என பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுகிறது எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து போதை வஸ்துகளை விற்பதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி பாமக சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பாரிமோகன், வேலுச்சாமி உள்ளிட்ட பாமகவினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.