கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு!!

கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு!!

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சத்தியமங்லம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

அப்போது, கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் மீனவர்களின் வலையில்  கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை ஒன்று சிக்கியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர். 

ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர்  சிலையை பார்வையிட்டனர். இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் காணப்படுகிறது. சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்து வந்து சிலையை பார்த்த வருவாய் அதிகாரிகள், ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் சிலையை ஆற்றில் நடுப்பகுதியில் வைத்து விட்டு, சிலையை எடுப்பதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே புதைக்கப் பட்டு இருந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

இதையும் படிக்க: 5 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!!