“அக். 14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெரும்” - திமுக எம்.பி. கனிமொழி

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு வரும், அக்டோபர் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என திமுக எம்.பி. கனிமொழி அறிவித்துள்ளார்.  

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 14-ம் தேதி திமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கலைஞர் செய்த சாதனைகள், திட்டங்களை பற்றி சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி  உள்ளிட்ட பல்வேறு மாநில பெண் தலைவர்கள்  பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர் என்றும் கனிமொழி வெளியிட்டுள்ள  அறிவிக்கையில்  தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க   | ” 'காந்தி ஜெயந்தி' அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்” - தமிழ்நாடு அரசு