தொழில்துறை வரலாற்றில் மைல்கள் பதிக்கும்...வீரநடை போடும்!!

தொழில்துறை வரலாற்றில் மைல்கள் பதிக்கும்...வீரநடை போடும்!!

முதலமைச்சரின் ஆதரவின் காரணமாகவே கடந்த இரண்டு ஆண்டுகளில் 225 தொழிற்சாலைகளிடம் ஒப்பந்தங்கள், 2,25,000 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே ஒப்ப்ந்தம் கையெழுத்தாகியுள்ளது.  

தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் நூறு சதவிகித துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் கூட்டப்பட்ட தொகுப்பு , மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மனமார்ந்த வாழ்த்துகள்:

இந்நிகழ்வை தொடர்ந்து பேசிய நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு மேற்கொள்வது பெருமையாக உள்ளது எனவும் தொழில் தொடங்க தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது எனவும் கூறினார்.  மேலும் மீண்டும் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா விற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

முதலீடுகள்:

தொடர்ந்து பேசிய அவர், டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே 15000 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது எனவும் முதலமைச்சரின் ஆதரவின் காரணமாகவே கடந்த இரண்டு ஆண்டுகளில் 225 தொழிற்சாலைகளிடம் ஒப்பந்தங்கள், 2,25,000 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தொழில் துறையை கட்டி காத்து முதலமைச்சர் இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

வீர நடை போடும்:

மேலும் ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி வாகனம் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் இந்த ஒப்பந்தங்கள் தொழில்துறை வரலாற்றில் மைல்கள் பதிக்கும் எனவும் முதலமைச்சர் தலைமையில் தொழில்துறை வீர நடை போடும் எனவும் கூறிய அவர், தொழில்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசினார்.

இதையும் படிக்க:  அறந்தாங்கியில் 250 கிலோ மாம்பழங்கள் அழிப்பு...காரணம் என்ன!!