இனி இப்படி தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா..!!

இனி இப்படி தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா..!!

பொங்கல் பரிசு தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கு தொடங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவல்,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த முறை ரொக்கமாகவே வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

பரிசுத் தொகையை நேரடியாக பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்த நிலையில் சுமார் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கு புதியதாக கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் மாவட்ட மத்திய வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்குவதற்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை நேரடியாகவே அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது.

இதையும் படிக்க:     முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்..குஜராத் தேர்தல் வெற்றி யாருக்கு?!!!