இந்தியை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள அது என்ன குழந்தையின் முத்தமா? - கவிஞர் வைரமுத்து.

இந்தியை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள அது என்ன குழந்தையின் முத்தமா? - கவிஞர் வைரமுத்து.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:- 

” முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை எலும்பு சதை நரம்பு இருக்கும் உடல் தான் மறைந்து போகும் தத்துவங்கள் மறைவதில்லை. இந்த நிமிடம் வரை கலைஞர் சமூகத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  சமூகத்துக்கு தேவைப்படும் தத்துவங்கள் என்றும் மறைவதில்லை;  இப்போதும் தேவைப்படுகிறது.

இந்தியை அனைவரும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன கருத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இந்தியை எதிர்க்காமல் ஏற்க வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார். எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள இந்தி என்ன குழந்தையின் முத்தம்மா? ” எனக் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசுகையில்:-

” தமிழர்கள் இந்தியின் எதிராளிகள் அல்ல; இந்தி திணிப்பின் எதிராளிகள், அதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர். தென் இந்தியா முழுக்க தமிழ் பேசப்பட்டது, அதை அம்பேத்கர் பதிவு செய்து உள்ளார்.  

கிருஷ்ணா, துங்க பத்ரா நதிகரைகளில் தமிழ் பேசப்பட்டு வந்தது; அது தெலுங்கு ஆனது, சமஸ்கிருதம் கலந்து  தமிழை பிரித்து விட்டது என்று மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹிந்தி, சமஸ்கிருதத்தில் இன்னொரு வடிவம், சமஸ்கிருதத்தின் நீட்சியாக இருக்கும் இந்தியை மட்டும் எப்படி ஏற்க முடியும்?  என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் தமிழர்களின் இன உணர்வோடு, மொழி உணர்வோடு கலைஞர் வாழ்வார்.

முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், கலைஞரின் கொள்கைகளை அவர் தாண்டப் பார்ப்பதில்லை, தாண்டப் பார்ப்பது அவரின் சாதனைகளை தான்.

கலைஞரை இளைஞர்கள் மறந்து விட கூடாது. தமிழ்நாட்டில் பேசபடுகின்ற  தமிழாவது, தமிழாகவே பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தியை எதிர்க்கிறோம்”,  என குறிப்பிட்டார்.

இதையும் படிக்க   | ” திமுகவின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது “ - இபிஎஸ் சாடல்.