அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம்... செங்கோட்டையன் உறுதி

இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என, சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவு, அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருமே தவிர, திராவிட மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது என பேசிய செங்கோட்டையன், மாணவர்கள் இடைநிற்றல் பூஜ்ஜியம் புள்ளி 75 சதவிகிதமாக இருப்பதாகவும், அதுவும் இருக்கக் கூடாது என்பது தான் தங்களின் கொள்கை எனவும் கூறியுள்ளார். யாழ்பாணத்திற்கு ஒரு லட்சம் நூல்கள் வழங்கியது, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நூல்களை அனுப்பி வைத்தல், கல்வி தொலைக்காட்சி தொடங்கியது என அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை விளக்கிப் பேசிய அவர், இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி... நீட் தேர்வாக இருந்தாலும் சரி... அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.