அலேக்கா தூக்கிய யானை...வைரலாகும் வீடியோ காட்சி...!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திருமண வீட்டில் கட்டி வைத்திருந்த வாழைமரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற யானையின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலேக்கா தூக்கிய யானை...வைரலாகும் வீடியோ காட்சி...!

கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை எனும் கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக வாழைமரங்கள் கட்டி வைத்திருந்தனர். அப்போது உணவிற்காக குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை வாசலில் கட்டி வைத்திருந்த வாழைமரத்தை தூக்கிச் சென்றுள்ளது. 

மேலும், திருமண வீட்டில் கட்டி வைத்திருந்த வாழைமரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற யானையின் வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.