தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறி விலை மீண்டும் அதிகரிப்பு...

தொடர் மழை காரணமாக, சென்னையில் காய்கறி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறி விலை மீண்டும் அதிகரிப்பு...

கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதுதவிர பயிரிடப்பட்ட காய்கறிகளும் மழையில் சேதமடைந்துள்ளன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வரத்து இருப்பதால், காய்கறி விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. நேற்றைய விலைபட்டியலோடு ஒப்பிடுகையில், வெங்காயம், உருளைக்கிழங்கு தவிர்த்து பிற பச்சை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி நேற்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் இன்று 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சௌசௌ, முள்ளங்கி, முருங்கைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. அதுதவிர மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய், நாட்டு தக்காளி 90 ரூபாய், சின்னவெங்காயம் கிலோ 55 ரூபாய், கேரட் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால்  வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.