வந்தே பாரத் கட்டணத்தை குறையுங்க - கோரிக்கை வைத்த முதல்வர் !!!!

வந்தே பாரத் கட்டணத்தை குறையுங்க - கோரிக்கை வைத்த முதல்வர் !!!!

அனைவரும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து விட்டு பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமர் மோடிக்கு Gandhi Travel in TamilNadu என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.

மேலும் படிக்க | உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி - எல்.முருகன் பேச்சு

வந்தே பாரத் ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்


இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வந்தே பாரத் ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் முன்னோடியாகத் திகழும் அண்ணாவின் பெயரில் உள்ள விமான நிலையம் திட்டம், வந்தே பாரத் என பல திட்டத்தைக் கொண்டு வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி.

வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்தால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளரும், கூட்டாட்சி தத்துவம் வளரும். சாலை திட்டத்தை மேம்படும் ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.

மேலும் படிக்க | பிரதமருக்கு முதலமைச்சர் கொடுத்த புத்தகம் என்ன?

சென்னை மதுரவாயல், சென்னை தாம்பரம் உயர்மட்ட சாலை, என பல முக்கிய திட்டம் நிறைவேற்ற வேண்டும். சென்னையிலிருந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. மேலும் புதிய திட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையம் விரிவாக்கம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவும், மெட்ரோ ரயில் திட்டம் 2ன் ஒன்றிய அரசு நிதி கிடப்பில் உள்ளது. அதனை வழங்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்