127 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது வண்டலூர் உயிரியல் பூங்கா...

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 127 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

127 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது வண்டலூர் உயிரியல் பூங்கா...

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா வைரஸ் இரண்டாம் அலை, படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் 127 நாட்களுக்குப் பிறகு சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இன்று காலை 9 மணி முதலே பொதுமக்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பலரும் முதல் நாளே பூங்காவுக்கு ஆர்வமாக வருகை தந்துள்ளனர்.

 

பார்வையாளர்களுக்கு முதலில் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அது இயல்பு நிலையில் இருந்தால்தான் டிக்கெட் வழங்கப்படுகிறது. சானிடைசர், முகக்கவசமும் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.