காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி..... கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு இறையன்பு கடிதம்....!

காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க  வலியுறுத்தி..... கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு இறையன்பு கடிதம்....!

காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அவர்,  காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது எனவும், மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவைக் காட்டிலும், இது 484 டி.எம்.சி  கூடுதல் என்றும், நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது எனவும், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

River that is also a dumping yard | Deccan Herald

இதையும் படிக்க      }  குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பாஜகவின் பண்பாடா? - சீமான் கேள்வி.

மேலும்,  காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது என்றும்,  முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது எனவும் குறிப்பிட்டள்ளார்.

தொடர்ந்து, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி  கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க      }  திமுக அரசில் மதுவுக்கு முக்கியத்துவம், சட்டம் சீர்குலைந்து வருகிறது - ஜி.கே.வாசன்