வேலூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி - வாழ்த்துக்களை குவிக்கும் பொதுமக்கள்

வேலூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி - வாழ்த்துக்களை குவிக்கும் பொதுமக்கள்

வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில், 37வது வார்டில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு சக திருநங்கைகள் உள்பட  ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.